புதுடில்லி: காங்கிரஸ் தலைவர், சோனியாவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின், ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, அக்கட்சியின் முக்கிய, பெண் நிர்வாகிகளில் ஒருவரான, சாஷியா இலிமி மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக: உ.பி., மாநிலம், ரேபரேலி தொகுதியில், சோனியாவை எதிர்த்து, சாஷியா இலிமி போட்டியிடப் போவதாக, கடந்த வாரம், பட்டியல் வெளியானது. ஆனால், நேற்று முன் தினம் நிருபர்களை சந்தித்த, சாஷியா, 'ரேபரேலியில் போட்டியிட விரும்பவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காக டில்லியில் போட்டியிட விரும்புகிறேன்' என்றார். இதை வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுவதாக, பா.ஜ., கூறுகிறது. அக்கட்சி தலைவர்களில் ஒருவரான, செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி, ''ஆம் ஆத்மி என்ற நீர்குமிழி உடைந்துவிட்டது; பெரிய வாக்குறுதிகளை கொடுத்த அவர்களால், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. மற்றவர்களை வெளிச்சம் போட்டு காட்ட முற்பட்டவர்களின் முகத்திரை கிழிந்துள்ளது,'' என்றார்.
Judul : சோனியாவை எதிர்த்து போட்டி: 'ஆம் ஆத்மி' பெண் வேட்பாளர் மறுப்பு
Deskripsi : புதுடில்லி: காங்கிரஸ் தலைவர், சோனியாவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின், ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட, அரவிந்த் கெஜ்ரிவாலின், ...