பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் பேசு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னிகா ஒரு ஹீரோயின். தாரணிக்கு ஜோடியாக யோகஸ்வரன் போஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். கிருபா என்ற புதுமுகம் ஹீரோ. அகிலன் படத்தை தயாரித்து நடித்த மதுரை டாக்டர் சரவணன் இதில் வில்லனாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு காமெடியனாக நடிக்கிறார்."தான் உண்டு, தன் வேலையுண்டு என்று ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவும், அவரது நண்பர்களும் பயந்த சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்களையே கொலைகாரன் ஆக்குகிறது இந்த சமூகம். ஏன் கொலை செய்தார்கள், அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தோட ஒன்லைன் ஸ்டோரி. காமெடியும் ஆக்ஷனும் பிப்டி பிப்டி இருக்கும்" என்கிறார் இயக்குனர் மகேஷ். இவர் சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கியவர்."பசங்க படத்துக்கு பிறகு நிறைய சான்ஸ் வந்துச்சு. ஸ்கூல்ல படிக்க வேண்டியது இருந்தால நடிக்கல. இடையில சில படங்கள்ல நடிச்சேன். அது சரியா போகலைன்னு சொன்னாங்க. இப்போ ஹீரோயினா நடிக்கிறேன். கிராமத்து வேடங்கள்ல நடிக்கத்தான் ஆசையா இருக்கு" என்கிறார் தாரணி.
Judul : பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!
Deskripsi : பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்! பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் ப...