முதுநகர்: கடலூர் முதுநகர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் விவசாயிகள் கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியலில்
ஈடுபட்டனர்.கடலூர் முதுநகர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ராமாபுரம், வழிசோதனைபாளையம், காரைக்காடு மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் த
ங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றன.கடந்த 2 வாரங்களாக வேர்க்கடலை வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 1,400 மூட்டைகள், நேற்று 800 மூட்டைகள் (80
கிலோ) விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.இதற்கிடையே, நேற்று காலை வியாபாரி சிராஜூதீன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யவதற்காக 13
லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு பண்ருட்டியில் இருந்து கடலூர் வந்து கொண்டிருந்தார். பாலூர் அருகே போலீசார், சிராஜூதீனிடம் உள்ள பணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதற்கான ஆதாரங்களை அவர் போலீசிடம் கொடுத்து விட்டு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.இதற்கிடையே, கடலூர் வேளாண் ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணம் வழ
ங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து காலை 11:30 மணிக்கு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற
முதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்தனர். அதனைத்தொடர்ந்து 11:45 மணிக்கு கலைந்து சென்றனர்.
அதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
Judul : மார்க்கெட் கமிட்டியில் பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம்: விவசாயிகள் மறியல்
Deskripsi : முதுநகர்: கடலூர் முதுநகர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் விவசாயிகள் கடலூர்- சிதம்ப...