காங்கேயம் : இலங்கை சிறையில் உள்ள அனைத்து 177 மீனவர்களும், அவர்களின் 44 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். அதன் பின்னர் தான் பேச்சுவார்த்தை என்று கூறினேன். மத்திய அரசு மூலம் இந்த நிபந்தனை இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என, ஈரோடு தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஈரோட்டில் காங்கேயம் பகுதியில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா லோக்சபா தேர்தலுக்கான பிசாரம் செய்தார். ஈரோடு தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் செல்வக்குமார சின்னையனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
சுதந்திரத்திற்கு முன்பிருந்த மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர்; மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்; வரும் லோக்சபா தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; இந்திய நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்கும் தேர்தல்; தற்போது மத்தியில் ஆளும் ஊழல் காங்கிரஸ் அரசை வெளியேற்ற வேண்டும்; தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியோ அவற்றை செய்து வருகிறோம்.
மீனவர் விரோத அரசு: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மத்திய அரசில் 17 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக என்ன செய்தது?; தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என திமுக கூறியது; மீனவர் விரோத காங்கிரஸ் அரசு மற்றும் திமுக.,விற்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்; வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி உள்ளது; விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த ஒரே அரசு அதிமுக அரசு தான்; இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது; லோக்சபா தேர்தலில் மக்கள் விரோத மத்திய அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்; காவிரி பிரச்னையில் துரோகம் இழைத்த திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்; இலங்கை சிறையில் இருக்கும் 177 மீனவர்களில் 116 மீனவர்களை மட்டும் இலங்கை அரசு நேற்று விடுவித்தது; மீதமுள்ள 61 மீனவர்களையும் விடுவிக்கும் வரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கிடையாது;
மத்திய அரசின் 15 துரோகங்கள்: தொழில்துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது; வருங்காலத்தில்5,300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது; சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்தது, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியது, அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது, விலைவாசியை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடித்தது உள்ளிட்ட 15 துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது; என்னுடைய முந்தைய ஆட்சியில் போடப்பட்ட மின் உற்பத்தி தி்ட்டங்களை செயல்படுத்தாத கருணாநிதி, இப்போது மின் உற்பத்தியை பற்றி பேசுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் மின் உற்பத்தியை சீர்குலைத்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்; மக்களுக்கு துரோகம் இழைத்த, 2ஜி இமாலய ஊழல் புரிந்த திமுக.,விற்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத தோல்வியை தர வேண்டும்;
உங்களின் ஓட்டு தான் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற போகிறது; உங்களின் ஓட்டு தான் மக்களின் தலைவிதியை மாற்ற போகிறது; அதனால் உங்களின் ஓட்டுக்களை வீணடிக்காமல் அதிமுக.,விற்கு ஓட்டளித்தால் இந்தியாவையே வல்லரசாக்கக் கூடிய வலிமையான அரசு மத்தியில் அமையும்; மற்ற கட்சிகளுக்கு ஓட்டளித்தால் ஓட்டுக்கள் சிதறும்; அதனால் எந்த பயனும் இல்லை; வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்கவும், ஊழல்கள் மூலம் மத்திய அரசிற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், மீனவர் நலனை காத்திடவும் மத்தியில் சிறப்பான ஆட்சி அமையவும் அதிமுக.,விற்கு ஓட்டளிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்; வலமான வல்லரவு; வலிமையான நல்லரசு மத்தியில் ஏற்பட அதிமுக.,விற்கு ஓட்டளிங்கள்; இவ்வாறு ஜெயலலிதா பேசி உள்ளார்.
Judul : என் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்: காங்கேயத்தில் ஜெ., பேச்சு
Deskripsi : காங்கேயம் : இலங்கை சிறையில் உள்ள அனைத்து 177 மீனவர்களும், அவர்களின் 44 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். அதன் பின...