
ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருநதினர்களாக கலந்து கொள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமும், நடிகர் கமல்ஹாசனும் சென்றுள்ளனர்.32வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 53 நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்கிறதாம். மேலும் இதுவரை இந்த கண்காட்சியில் இணையாமல் இருந்த இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹங்கேரி, போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் இந்த ஆண்டு முதல் தங்களையும் இதில் இணைத்துக் கொண்டுள்ளதாம்.ஷார்ஜாவிலுள்ள எக்ஸ்போ சென்டரில் நவம்பர் 6-ந் தேதியான இன்று தொடங்கிய இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் சுல்தான் என்பவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உலகத்தின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்து கொள்ளும நிலையில, இந்தியாவில் இருந்து அப்துல்கலாமும், கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Judul : சர்வதேச புத்தக கண்காட்சியில் அப்துல்கலாம்-கமல்ஹாசன்!
Deskripsi : ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருநதினர்களாக கலந்து கொள்ள முன்னாள் இந்தி...