தமிழில் பூ படத்தில் நடித்த பார்வதி, அதன்பிறகு பல ஆண்டுகளாக காணாமல் போனவர், மறுபடியும் தனுசுடன் மரியான் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். என்றபோதும், இந்தமுறையும் அவர் நடித்த படம் வெற்றி பெறாததால், கோலிவுட்டில் புதிய படங்கள் எதுவுமே கமிட்டாகவில்லை.அதனால் மீண்டும் தோல்வி முகத்துடன் தாயகமான கேரளத்துக்கு திரும்பிய பார்வதி சில மாதங்களாக எடுத்த தீவிர முயற்சியின் பலனாக இப்போது ப்ருதிவிராஜ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். 1960களில் கேரளா, கோலிக்கோட்டில் பேசப்பட்ட காதல் ஜோடிகளான மொய்தீன்-காஞ்சனாமாலாவின் நிஜகாதலை மையப்படுத்தி உருவாகும இப்படத்தில் காஞ்சனாமாலாவாக நடிக்கிறாராம் பார்வதி.ஏற்கனவே தமிழைப்போலவே மலையாளத்தில் சில காதல் கதைகளில் நடித்திருக்கும் பார்வதி, இந்த முறை இதுவரை நடித்ததை விடவும் உயிரோட்டமாக நடித்து கேரளா அரசின் விருதினை பெறுவதற்காகவும் முயற்சிக்கப்போகிறாராம். அதனால், காஞ்சனாமாலாவின் காதல் இப்போதும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த கோலிக்கோட் பகுதிக்கு சென்று, அவரைப்பற்றிய செய்திகளை சேகரித்து வர, தனது உதவி சகாக்கள் சிலரையும் அனுப்பி வைத்திருக்கிறாராம் பார்வதி.அவரது இந்த முயற்சியும், ஈடுபாடும் அப்படத்தை இயக்கும் விமல் மற்றும் ஹீரோ ப்ருதிவிராஜ்க்கும், பார்வதி மீதான மரியாதையை இன்னும் உயர்த்தியிருக்கிறதாம்.
Judul : நிஜகாதல் கதாபாத்திரத்தில் நடிக்கும் மரியான் பார்வதி!
Deskripsi : தமிழில் பூ படத்தில் நடித்த பார்வதி, அதன்பிறகு பல ஆண்டுகளாக காணாமல் போனவர், மறுபடியும் தனுசுடன் மரியான் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தா...