இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்காவுக்கு தான், முக்கியமான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்றியே அமைக்கப்பட்டுஉள்ளதால், அந்த படத்தில், ரொம்பவே ஆர்வம் காட்டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார், அனுஷ்கா. அதேபோல், 'சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்கும்போது, உங்கள் நடிப்பு யதார்த்தமாக இருக்கும்' என, இயக்குனர், அனுஷ்காவிடம் கூறினாராம். அனுஷ்காவும், முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால், அனுஷ்காவின் தமிழில், தெலுங்கு மற்றும் இந்தி வாடை அடித்ததால், அவர் குரல் செட்டாகவில்லையாம். இதையடுத்து, அனுஷ்காவுக்கு, சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளனர். இதனால், 'தமிழில் சொந்த குரலில் பேச முடியாமல் போய் விட்டதே' என, வருத்தத்தில் இருக்கிறார், அனுஷ்கா. அடுத்தடுத்த தமிழ் படங்களில், சொந்த குரலில் பேசியே தீருவது என, முடிவெடுத்துள்ளாராம். ஆனாலும், 'இரண்டாம் உலகம்' படத்தின் தெலுங்கு பதிப்பில், அனுஷ்காவே, சொந்த குரலில் பேசியுள்ளாராம்.
Judul : தமிழில் பேச அனுஷ்கா சபதம்
Deskripsi : இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்காவுக்கு தான், முக்கியமான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்றியே அமைக்கப்பட்ட...