'தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன்' படங்களில் நடித்த நீத்து சந்திராவுக்கு, இப்போது, எந்த மொழியிலும் படம் இல்லையாம். அதனால், மேடை நாடகங்களில் நடிக்கத்
துவங்கிவிட்டார். கவிஞர் உமாராவோ ஜான் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் உருவான ஒரு படத்தில், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அந்த வேடத்தில் தான், இப்போது நீத்து சந்திரா நடிக்கிறார். மேடை நாடகம் என்றாலும், அதை கூட சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக, உருது மொழியில் பேசி நடிக்க பயிற்சி எடுத்துவரும் நீத்து, 'கதக்' நடனத்தையும் பயிற்சி செய்து வருகிறாராம். வெளி நாடுகளில் கதக் நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டம் வைத்துள்ளாராம். அதனால், ரொம்ப சின்சியராக பயிற்சி எடுக்கிறாராம்.
Judul : கதக் நடனம் பயிலும் நீத்து சந்திரா
Deskripsi : 'தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன்' படங்களில் நடித்த நீத்து சந்திராவுக்கு, இப்போது, எந்த மொழியிலும் படம் இல்...