தொப்புள் பிரச்னை தீர்ந்து 'நய்யாண்டி' படம் ரிலீஸாகியுள்ள நிலையில், 'நய்யாண்டி' படத்தின் கதை என்னுடையது என மலையாள தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'நய்யாண்டி' படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். சற்குணம் இயக்கத்தில், தனுஷ்-நஸ்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் 'நய்யாண்டி'. இப்படம் வெளிவர சில நாட்கள் இருந்த நிலையில், படத்தில் நான் நடிக்காத தொப்புள் காட்சியை மார்பிங் செய்து படத்தில் வெளியிட்டுவிட்டனர் என பிரச்னை செய்தார் இப்படத்தின் நாயகி நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அந்தக்காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்தனர். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் மணி.சி.கப்பன் என்பவர் நய்யாண்டி படத்தின் கதை என்னுடையது என்று புது பிரச்னையை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். தமது மனுவில் மணி.சி.கப்பன் கூறியிருப்பதாவது, மலையாளத்தில் 1993ம் ஆண்டு, ஜெயராம்-ஷோபனா நடிப்பில் நான் தயாரித்த படம் 'மெலி பரம்பில் ஆண் வீடு'. இப்படத்தின் கதையை இப்போது நய்யாண்டி என்ற பெயரில் தமிழில் எடுத்துள்ளனர். இதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. படத்தை பார்த்த பலரும் இது என்னுடைய படம் போன்று இருப்பதாக கூறினர். மேலும் படத்தில் 12க்கும் மேற்பட்ட காட்சிகள் எனது படத்தில் இருப்பது போன்றும், அதில் வரும் வசனங்கள் கூட என் படத்தில் இடம்பெற்ற வசனம் போன்றே படமாக்கப்பட்டு இருப்பதாகவும், இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய நான் முயற்சி எடுத்து வந்த வேளையில், என்னிடம் அனுமதி பெறாமல் நய்யாண்டி படத்தை எடுத்துள்ளனர். ஆகவே இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி நய்யாண்டி படத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.
Judul : நய்யாண்டி படம் என்னுடையது - மலையாள தயாரிப்பாளர் வழக்கு!!
Deskripsi : தொப்புள் பிரச்னை தீர்ந்து 'நய்யாண்டி' படம் ரிலீஸாகியுள்ள நிலையில், 'நய்யாண்டி' படத்தின் கதை என்னுடையது என மலையாள தய...