கமல் நடித்த, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக
சினிமாவுக்கு வந்தவர் ஸ்ருதி ஹாசன். ஆனால், அதன் பின் நடிப்பதற்கு தொடர்ந்து
வாய்ப்புகள் வந்ததால், 'லக்' என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்தார் ஸ்ருதி.அப்படி துவங்கியவர், சில ஆண்டுகளிலேயே, இந்திய அளவில் பிரபல நடிகையாகிவிட்டார்.
இருப்பினும், இசையில் ஸ்ருதிக்கானஈடுபாடு குறையவில்லை. தமிழ், இந்தியில் சில
பாடல்களை பாடியிருப்பவர், சமீபத்தில், கவுதம் கார்த்திக் நடிக்கும், 'என்னமோ ஏதோ' என்ற படத்துக்காகவும், இமான் இசையில், ஒரு பாடல் பாடியிருக்கிறார்.'கொலவெறி'
இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து, 'நீ என்ன பெரிய அப்பா டக்கரா' என்ற, அந்த பாடலை ஸ்டைலிஷாக பாடினாராம் ஸ்ருதி. அதனால், அப்பாடல் இளவட்ட ரசிகர்களின் பேவரிட் பாடலாகி விடும் என்கிறார் இமான்.
Judul : ஸ்ருதி ஹாசனின் இசை ஆர்வம்
Deskripsi : கமல் நடித்த, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்கு வந்தவர் ஸ்ருதி ஹாசன். ஆனால், அதன் பின்...