குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்தவர், கல்யாணி. அதற்கு பின், ஒரு சில படங்களில், ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து, வாய்ப்புகள் வராததால், சின்னத் திரைக்கு தாவினார். நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் என, பல அவதாரங்களை எடுத்தார். தற்போது, இவருக்கும், மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். விரைவில், இவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது. இதுகுறித்து கல்யாணி அளித்துள்ள பேட்டியில்,'இது, காதல் திருமணம் அல்ல; பெற்றோர்களாக பார்த்து, ஏற்பாடு செய்தது. ஆனால், இப்போது, இருவரும் அடிக்கடி பேசுவதால், எங்களுக்கு இடையே, காதல் மலர்ந்து விட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து, திருமணம் முடியும் வரை உள்ள காலம் இருக்கிறதே. அப்பப்பா, அது, வித்தியாசமான அனுபவம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திருமணம் முடிந்ததும், சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் சின்னத் திரைக்கு வருவேன்' என்கிறார்.
Judul : கல்யாணிக்கு கல்யாணம்
Deskripsi : குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்தவர், கல்யாணி. அதற்கு பின், ஒரு சில படங்களில், ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து, வாய்ப்புகள் வராத...