விஜயசாந்திக்கு பின், அத்தனை கனகச்சிதமாக, எந்த நடிகைக்கும் காக்கி சட்டை
பொருந்தவில்லை. சினேகா கூட, 'பவானி ஐ.பி.எஸ்., படத்தில் போலீஸ் உடையணிந்து,
ஆக் ஷன் கோதாவில் குதித்தார். அது, பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
இருப்பினும், தற்போது, 'ஜில்லாவில் காஜல் அகர்வாலும், 'சபாஷ் மாப்ளே'யில்,
பிந்து மாதவியும் போலீஸ் கெட்டப்பில் நடித்து வருகின்றனர். இவர்களைத்
தொடர்ந்து, 'இளமை ஊஞ்சல்' படத்தில், மச்சான்ஸ் புகழ் நமீதாவும், அதிரடி
போலீஸ் வேடமேற்றுள்ளார்.இதன்மூலம், தன் மறுபிரவேசத்தை துவங்கியிருப்பதாக
சொல்லும் நமீதா, பல மாதங்களாக ஜிம்மில் தவமிருந்து கரைத்த ஸ்லிம்
உடம்புடன், இந்தப்படத்தில் நடிக்கிறேன். அதிலும், பயங்கரவாதிகள் கடத்தி
செல்லும் ஐந்து நடிகைகளை, அவர்களிடமிருந்து மீட்கும் போலீஸ் என்பதால், ஆக்
ஷன் காட்சிகளிலும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்' என்கிறார்.
விஜயசாந்தி விட்டுச் சென்ற இடத்தை பிடிப்பது தான், அவரின் அடுத்த
குறிக்கோளாம்.
Judul : போலீஸ் வேடத்தில் நமீதா
Deskripsi : விஜயசாந்திக்கு பின், அத்தனை கனகச்சிதமாக, எந்த நடிகைக்கும் காக்கி சட்டை பொருந்தவில்லை. சினேகா கூட, 'பவானி ஐ.பி.எஸ்., படத்தில் போ...