பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது பெற்றவர் ப்ரியா
மணி. ஆனால், அதன்பின் பிரகாசமாக வேண்டிய, அவரது தமிழ் சினிமா பயணம்,
மந்தமாகி விட்டது. இதனால், குடும்ப பாங்கான நடிகை என்ற இமேஜிலிருந்து
விடுபட்டு, அதிரடி கவர்ச்சி கதாநாயகியாகவும் உருவெடுத்த ப்ரியா மணிக்கு,
திருமணம் செய்ய, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக, செய்தி
பரவியுள்ளது.ஆனால், இதுபற்றி அவரைக் கேட்டால், சான்சே இல்லை. இப்பக்கூட,
என் கைவசம், நான்கைந்து படங்கள் உள்ளன. அதனால், நானும் சரி, பெற்றோரும்
சரி என் கல்யாணத்தைப் பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை' என்கிறார்,
ப்ரியா மணி, '30 வயதான நடிகைகளே, கல்யாணத்தை பற்றி யோசிக்கவில்லை.
அப்படியிருக்க, என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்' என்று கேள்வி
கேட்கிறார்.
Judul : 'கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?': ப்ரியா மணி
Deskripsi : பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது பெற்றவர் ப்ரியா மணி. ஆனால், அதன்பின் பிரகாசமாக வேண்டிய, அவரது தமிழ் சினிம...