அஜீத் போன்ற சில நடிகர்கள், படப்பிடிப்பில் ரிஸ்க்கான காட்சிகளில்
நடிப்பதால், அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.இதனால், ஆர்யா,
ஆபத்தான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்,
ஒரு நாள், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது, அவரது காலில் பலத்த
அடிபட்டதாம்.அதற்கான சிகிச்சைக்கு சென்றபோது, அறுவை சிகிச்சை செய்து
கொண்டால் பிரச்னை இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்களாம். அந்த
சமயத்தில், 'இரண்டாம் உலகம், ஆரம்பம்' படங்களில் நடித்துக் கொணடிருந்ததால்,
அப்போதைக்கு தள்ளி வைத்த ஆர்யா, இப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு,
வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும், சில இயக்குனர்களை
அழைத்து, கதை கேட்டபடி ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கி வருகிறார் ஆர்யா.
Judul : காலில் அடிஓய்வெடுக்கிறார் ஆர்யா
Deskripsi : அஜீத் போன்ற சில நடிகர்கள், படப்பிடிப்பில் ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பதால், அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.இதனால், ஆர்யா, ஆ...