தனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன், இல்லையேல் வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமலே வாழ்க்கையை கழித்துவிடுவேன் என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இவரது தம்பி சித்தார்த் சோப்ராவிற்கு திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவருடைய திருமணம் எப்போது என்று பலரும் கேட்க தொடங்கிவிட்டனர். தனது திருமணம் குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், நான் திருமணம் செய்வதற்கு எந்த நெருக்கடியும் இல்லை, என் குடும்பத்தினரும் என்னை நிர்பந்திக்கவில்லை. எனக்கு ஏற்ற மணமகன் கிடைக்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். என்னை திருமணம் செய்பவர் பெண்களை மதிக்கும் நபராக இருக்க வேண்டும், அது தான் என் முதல் கண்டிஷன், அப்படிப்பட்டவரை நான் சந்தித்தால் உடனே திருமணம் தான். ஒருவேளை அப்படி ஒருவரும் கிடைக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
Judul : தகுதியானவர் கிடைத்தால் திருமணம்... இல்லையேல் பிரம்மச்சர்யம் - பிரியங்கா சோப்ரா
Deskripsi : 4 தனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன், இல்லையேல் வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமலே வாழ்க்கையை கழித்துவிட...