'நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது, அமலா பால் விஷயத்தில், உண்மையாகத் தான் இருக்கிறது. 'தலைவா' படத்துக்கு பின், தமிழில், நம்பர் ஒன் ஹீரோயினாகி விடுவோம். அதன் பின், சம்பளத்தையும், எக்கச்சக்கமாக உயர்த்தி விடுவோம் என, கனவு கணக்கு போட்டிருந்தார், அமலா. ஆனால், 'தலைவா' படம், எதிர்பார்த்த அளவுக்கு போகாததால், அவரின் கணக்கு எல்லாமே, தப்பு கணக்காக ஆகி விட்டது. இதனால், ஏமாற்றம் அடைந்துள்ள அமலா பால், இப்போதெல்லாம், எந்த விஷயத்தையும், அதிகம் எதிர்பார்ப்பது இல்லையாம். 'நடப்பது நடக்கட்டும்' என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டார். தமிழில், தற்போது, இரண்டு படங்கள் தான், கைவசம் உள்ளன. தெலுங்கிலும், நிலைமை, சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாமல், படங்களில் நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விட்டேன். அதனால், ஏமாற்றம் ஏற்பட்டாலும், அதை தாங்கி கொள்ளும் மனநிலை வந்து விட்டது' என்கிறார், அமலா.
Judul : 'இப்போதெல்லாம் அதிகம் எதிர்பார்க்கிறது இல்லை': அமலா பால்
Deskripsi : 'நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது, அமலா பால் விஷயத்தில், உண்மையாகத் தான் இருக்கிறது. 'தலைவா' படத்த...