பாலிவுட்டில் பாராட்டை பெற்ற கையோடு, கோலிவுட் கோதாவில் குதித்த யாமி கவுதமுக்கு, 'கவுரவம்' படத்துக்கு பின், 'தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும்' என்ற, ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இதனால், மீண்டும், பாலிவுட்டில், கவனம் செலுத்த துவங்கி விட்டார். அவர் கூறுகையில், 'சினிமாவுக்கு வந்தபின், ஓய்வு கிடைப்பது, அரிதாகி விட்டது. அப்படி ஓய்வு கிடைத்தால், துாங்கு, துாங்கு என, துாங்கி விடுவேன். அப்புறம் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த நடிகை அப்படி, இந்த நடிகர் இப்படி, என, டீ சாப்பிட்டுக் கொண்டே, ஜாலியாக அரட்டை அடிப்பேன். அப்புறம் புத்தகங்கள் என்றால், எனக்கு உசுரு. இப்போது, 'டிஸ்கவரி ஆப் இந்தியா' படித்து வருகிறேன். மேலும், காலித ஹுசைன் போன்றவர்கள் எழுதிய புத்தகங்களையும், ஆர்வமாக படிப்பேன்' என்கிறார்.
Judul : 'பீதியை கிளப்புவதுதான் எங்க வேலை': யாமி கவுதம்
Deskripsi : பாலிவுட்டில் பாராட்டை பெற்ற கையோடு, கோலிவுட் கோதாவில் குதித்த யாமி கவுதமுக்கு, 'கவுரவம்' படத்துக்கு பின், 'தமிழ்ச் செல்வனும்,...