ஒரு சினிமா விழாவில் தனுஷின் நடிப்பை புகழ்ந்து பேசிய விஜய், என்னால் கூட அவர் அளவுக்கு நடிக்க முடியாது என்றும் தனுஷை உயர்த்தி பேசினார். அதை அதே விழாவில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தனுஷ் மெய்சிலிர்த்துப்போனார். தன்னைவிட ஒரு பெரிய நடிகர் பப்ளிக்கில் தன்னை தாழ்த்திக்கொணடு நம்மை உயர்த்தி பேசுகிறாரே என்று ஆனந்தக் கண்ணீர் ததும்பினாராம் தனுஷ். அதனால், விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும், விஜய்யின் பெருந்தன்மையை தனது டுவிட்டரில் எழுதியிருந்தார். அதில் விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை. அவர்தான் என்றென்றைக்கும் பெரிய நடிகர் என்று தனது பெருந்தன்மையை எடுத்து வைத்தார் தனுஷ்.
அதேபோல் இப்போது ஆர்யாவும், அஜீத்தைப்பற்றி உயர்வாக பேசிக்கொண்டு திரிகிறார். அதாவது, ஆரம்பம் படத்தில் அவருக்கு இணையாக என்னை நடிக்க வைத்தே பெரிய விசயம். அதோடு, படத்தின் விளம்பரங்களில் எனது பெயரையும் இடம்பெறச்செய்தார். இந்த பெருந்தன்மை அஜீத்தை தவிர வேறு எந்த நடிகருக்கும் வராது. ஏன் எனக்கேகூட வராது என்று புகழ்ந்து தள்ளி வருகிறார். மேலும், படப்பிடிப்பில் நான் அவரை ஒரு நடிகராகத்தான் நினைத்தேன். ஆனால், அவரோ என்னை ஒரு தம்பி போல் கருதினார். அந்த வகையில் அஜீத்தின் அன்புக்கு நான் அடிமையாகி விட்டேன் என்கிறார் ஆர்யா.
Judul : அஜீத்தின் அன்புக்கு அடிமையான ஆர்யா!
Deskripsi : ஒரு சினிமா விழாவில் தனுஷின் நடிப்பை புகழ்ந்து பேசிய விஜய், என்னால் கூட அவர் அளவுக்கு நடிக்க முடியாது என்றும் தனுஷை உயர்த்தி பேசினார். அதை...