தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளார். எப்போது கதையின் நாயகனாக இருக்க விரும்பும் விஜய் சேதுபதி அளித்த சிறப்பு பேட்டி இதோ... * ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ரிசல்ட் எப்படி?‘பீட்சா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ‘சூது கவ்வும்’ வரிசையில் இந்தப் படமும் வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கதையிலும், நடிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.
* நீங்கள் நடிக்கும் படங்களில் மற்ற ஹீரோக்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதேன்?ஒரு கதையில், எத்தனை ஹீரோ இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. அதில், எனது கேரக்டரின் பங்களிப்பை மட்டுமே கருத்தில் கொள்கிறேன். அடுத்து, ஆர்யா, விஷ்ணு, கிருஷ்ணா போன்ற ஹீரோக்களுடனும், தலா ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்.* உங்கள் நடிப்பை சக கலைஞர்கள் யாராவது பாராட்டியிருக்கிறார்களா?சிம்பு, தனுஷ், சித்தார்த், திரிஷா, சமந்தா என்று பலர் மனதார பாராட்டியுள்ளனர். வளர்ந்து வரும் என்னை, வளர்ந்து விட்ட அவர்கள் பாராட்டுவது சந்தோஷமாக உள்ளது.* நடிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது, தயாரிப்பில் இறங்கியதேன்?‘சங்கு தேவன்’ படத்தை நான் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில், தயாரித்துக் கொடுக்கிறேன். இதுவும், ஒரு முயற்சிதான். நானெல்லாம் நடிகனாவேன்னு நெனைக்கவே இல்லை. ஆனால், முயற்சி செய்தேன். நடந்து விட்டது. அதேபோல்தான், படம் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன்.
* ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்காதது ஏன்?கதைகள் தான், எப்படி நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. நான் நடித்த பல படங்களில், ஹீரோயின்களுடன் நெருக்கமாகவே நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால், ‘பீட்சா’ படத்தில் மட்டும் ரம்யா நம்பீசனுடன் சில காட்சிகளில் ஓரளவு நெருக்கமாக நடித்திருந்தேன்.
Judul : நானெல்லாம் நடிகனாவேன்னு நெனச்சதே இல்லை - விஜய் சேதுபதி!!
Deskripsi : தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது ...