தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில், 35,000 பாடல்களுக்கு மேல் பாடி, தென் மாநில திரைப்பட ரசிகர்கள் மத்தியில், கானக் குயிலாக வலம் வந்தவர், ஜானகி. இளையராஜா இசையில், இவர் பாடிய, ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ உள்ளிட்ட பல பாடல்கள், காலத்தால் அழிக்க முடியாதவை. ஏ.ஆர்.ரகுமான் இசையிலும், ‘மார்கழி திங்கள் அல்லவா, நெஞ்சினிலே, நெஞ்சினிலே’ போன்ற, உருக வைக்கும் பாடல்களை பாடியிருந்தார். கடந்த, 10 ஆண்டுகளாக, உடல் நிலை சரியில்லாததால், திரைப்படங்களில் பாடுவதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, தனுஷ் நடிக்கும்,‘வேலை இல்லாத பட்டதாரி’ என்ற படத்தில், அனிருத் இசையில் பாடப் போகிறாராம். கானக் குயிலின் தாலாட்டில், தமிழ் திரைப்பட ரசிகர்கள், தங்களை மெய் மறக்கப் போகின்றனர்.
Judul : மீண்டும் வருகிறது கானக்குயில்
Deskripsi : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில், 35,000 பாடல்களுக்கு மேல் பாடி, தென் மாநில திரைப்பட ரசிகர்கள் மத்தியில், கானக் குயில...