அழகா, இளமையா இருக்கீங்க: ஆரம்பம் பார்த்துவிட்டு, ஆர்யா, டாப்ஸியை மனம் திறந்து பாராட்டிய அஜீத்
பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் அடுத்த வரிசையில் உள்ள ஹீரோக்கள் நடித்தால் பெரிய ஹீரோக்கள் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ரஜினி மட்டுமே எல்லோரையும் மனம் திறந்து பாராட்டுவார். மற்றவர்கள் மேடையில் வேண்டுமானால் பாராட்டுவார்கள். ரஜினிக்கு அடுத்து பாராட்டுகிறவர் அஜீத்.ஆரம்பம் வருகிற 31ந் தேதி ரிலீசாகிறது. அஜீத்தின் அடுத்த படமான வீரம் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 20ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கி வருகிற 5ந் தேதி வரை நடக்கிறது. ஆரம்பம் வெளிவரும்போது அவர் இங்கு இல்லாத சூழ்நிலை இருப்பதால் படத்தை முன்கூட்டிய பார்த்துவிட விரும்பினார். நிர்வாக தயாரிப்பளார் ஏ.எம்.ரத்தினம் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அஜீத் தன் குடும்பத்தினருடன் படத்தை பார்த்தார்.படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அஜீத், இயக்குனர் விஷ்ணுவர்த்தனை கட்டிப்பிடித்து பாராட்டினார். அடுத்த நிமிடமே ஆர்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். "ஆரம்பம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நான் ரொம்ப ரசித்துப் பார்த்தேன். ஸ்கிரீன்ல நீங்களும், டாப்ஸியும் வர்ற சீன்ஸ் எல்லாமே அழகாவும், இளமையாவும் இருக்கு. எல்லோரையும் கவரும் வகையில் இருக்கு. இந்தப் படம் நிச்சயம் உங்களை புதிய உயரத்துக்கு கூட்டிச் செல்லும். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று கூறினார். பதிலுக்கு ஆர்யா "உங்க பாராட்டு எனக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுக்குது. உங்களோட பணிபுரிய எப்போ சான்ஸ் கிடைச்சாலும் மிஸ் பண்ணவே மாட்டேன்" என்றார். அஜீத்தின் திடீர் பாராட்டால் உற்சாகமாக இருக்கிறார் ஆர்யா.
Judul : அழகா, இளமையா இருக்கீங்க: ஆரம்பம் பார்த்துவிட்டு, ஆர்யா, டாப்ஸியை மனம் திறந்து பாராட்டிய அஜீத்
Deskripsi : அழகா, இளமையா இருக்கீங்க: ஆரம்பம் பார்த்துவிட்டு, ஆர்யா, டாப்ஸியை மனம் திறந்து பாராட்டிய அஜீத் 10 பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடிக்கு...