ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ப்ரியாஆனந்த்!
எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த், அதர்வாவுடன் இரும்புக்குதிரை படத்தையடுத்து இப்போது விமலுக்கு ஜோடியாக ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்றது. அப்போது அந்த சுற்றுவட்டாரங்களில இருந்து படப்பிடிப்பை காண சுமார் ஒன்றரை லட்சம் ரசிகர்கள் கூடி விட்டார்களாம்.விமல், ப்ரியாஆனந்த், சூரி ஆகியோர் நின்று கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள், ப்ரியாஆனந்திடம், போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நெருங்கியவர்கள் ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்களாம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் ப்ரியாஆனந்தின் மீது சீண்டியிருக்கிறார்கள். இதனால் கூச்சலிட்டிருக்கிறார் ப்ரியாஆனந்த்.அதையடுத்து, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், கூட்டத்தின் பிடியில் இருந்து ப்ரியாவை மீட்டு, கேரவனுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்தியவர்கள், பின்னர் கூட்டத்தை ரயில்வே ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியேற்றி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர்களாம். இருப்பினும், படப்பிடிப்பு முடியும் வரை ப்ரியாஆனந்த் ஓய்வெடுத்த கேரவனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்களாம்.
Judul : ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ப்ரியாஆனந்த்!
Deskripsi : ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ப்ரியாஆனந்த்! எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த், அதர்வாவுடன் இரும்புக்குதிரை படத்தையடுத்து இப்போது விமலு...