ஜி.வி.பிரகாஷை பாராட்டிய கோலிவுட் ஹீரோக்கள்!
வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார், குறுகிய காலத்தில் 25 படங்களுககு இசையமைத்து சாதனை புரிந்தவர். இந்த நிலையில், சினிமாவில் தனது எல்லையை விரிவுபடுத்த நினைத்த அவர், மதயானைக்கூட்டம் என்ற படத்தில் தயாரிப்பாளர் ஆனார். அதையடுத்து இப்போது பென்சில் என்ற படத்தில் கதாநாயகனாகியிருக்கிறார்.இப்படத்தில் நடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தன் காதலியும், பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ். அந்த சந்தோசத்தில் ஏற்கனவே இருந்ததை விட ஒரு சுற்று பெருத்துப்போயிருந்தார். ஆனால், பென்சில் படத்தில் ப்ளஸ்-2 மாணவராக நடிப்பதால் உடம்பை இன்னும் குறைக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதையடுத்து டயட்ஸ் கடைபிடித்து தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய அவர், சில மாதங்களிலேய 10 கிலோ வரை வெயிட் குறைத்து, பள்ளி சிறுவனாக முற்றிலுமாக மாறி விட்டார்.இதையடுத்து படப்பிடிபபில் கலந்து கொண்டு நடித்த ஜி.வி.பிரகாஷின், புகைப்படங்களைப்பார்த்த கோலிவுட்டின் ஹீரோக்களுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்ததாம். படத்துக்குப்படம் தாங்கள் இரண்டொரு கிலோக்களை குறைப்பதற்கே படாதபாடு பட்டு வரும் நிலையில், 10 கிலோவை அவர் குறைத்ததை சாதனையாக கருதுகிறார்களாம்.அதனால், விஜய், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு போன் போட்டு அவரை பாராட்டியுள்ளார்களாம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவர், இப்போது உடல் எடை குறைத்ததற்கு பாராட்டிய அவர்கள், அடுத்து தனது நடிப்பை பார்த்தும் பாராட்ட வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
Judul : ஜி.வி.பிரகாஷை பாராட்டிய கோலிவுட் ஹீரோக்கள்...
Deskripsi : ஜி.வி.பிரகாஷை பாராட்டிய கோலிவுட் ஹீரோக்கள்! வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார், குறுகிய காலத்தில் 25 படங்களுககு இ...