தெனாவெட்டு என்ற படத்தில் நடித்ததாலா தெரியவில்லை. நஸ்ரியா விஷயத்தில் ஜீவாவின் காண்பிக்கும் பிடிவாதம் அசட்டு தெனாவெட்டாகவே தெரிகிறது.
உப்பு பெறாத விஷயத்துக்காக கமிஷனர் அலுவலகம் சென்று தனது மதத்தையும், சமூகத்தையும் தெருவுக்கிழுத்து தயாரிப்பாளரை தண்ணி குடிக்க வைத்தவர் நஸ்ரியா. அந்த பொண்ணை நடிக்க வைத்தால் நாக்கு தள்ளிடும் என்று யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் பாலாஜி மோகன் அவரை தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
ஜீவாவின் நீயெல்லாம் நல்லா வருவடா படத்திலிருந்து நஸ்ரியாவை தூக்கிவிட்டதாக செய்திகள் வந்தன. அவரை நடிக்க வைக்க இயக்குனருக்கும் விருப்பமில்லை. ஆனால் ஜீவா, யார் என்ன சொன்னாலும் என்னுடைய படத்தில் நஸ்ரியாதான் ஹீரோயின் என்று பெல் அடித்திருக்கிறார். வேறு மொழிகளில் இதுபோன்று நடக்குமா?ஜீவாவின் மார்க்கெட் ஏற்கனவே அவுட் ஆஃப் போகஸில் இருக்கிறது. அவுட் ஆஃப் ஆர்டராக மாறாமலிருந்தால் சரிதான்.
Judul : நஸ்ரியாவேதான் வேணும் - நடிகரின் தெனாவெட்டு
Deskripsi : தெனாவெட்டு என்ற படத்தில் நடித்ததாலா தெரியவில்லை. நஸ்ரியா விஷயத்தில் ஜீவாவின் காண்பிக்கும் பிடிவாதம் அசட்டு தெனாவெட்டாகவே தெரிகிறது. உப்...