ஆடலும், பாடலும் நிறைந்த அழகான காதல் கதை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த, இளைஞனும், இளம் பெண்ணும் காதலிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், படத்தின் ஒன்லைன். ஆனால், இது ஏற்கனவே, பார்த்து, பார்த்து போரடித்துப் போன கதை என்பதால், அதில், மும்பையில், சில காலத்துக்கு முன் வரை, புகழ் பெற்று விளங்கி, தற்போது அரசின் தடையால், அழிவின் விளிம்பில் இருக்கும், மதுபான விடுதி நடனத்தை பற்றிய கதையை புகுத்தியுள்ளனர். இதில், கங்கனா ரணாவத், மதுபான விடுதியில் நடனமாடும் பெண்ணாக நடித்துள்ளார். அரசின் தடையால், அவருக்கு ஏற்படும் பாதிப்பை, பரபரக்க வைக்கும் காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். படத்தை இயக்கியுள்ளவர், விஸ்வாஸ் பாட்டீல். நம்ம ஊர் பிரகாஷ் ராஜும், இதில், முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
Judul : விரைவில்... 'ரஜ்ஜோ'
Deskripsi : ஆடலும், பாடலும் நிறைந்த அழகான காதல் கதை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த, இளைஞனும், இளம் பெண்ணும் காதலிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகள...