திருவனந்தபுரம்: ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மோகன்லாலின் பெயர் இரண்டாவதாக போடப்பட்டுள்ளதை பார்த்துவிட்டு அவரின் மலையாள ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இளைய தளபதி விஜய், மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் பண மாலையுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.
ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மதுரைக்காரராக நடிக்கும் விஜய்யின் கெத்தான போஸ் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஜில்லா ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த மோகன்லாலின் கேரளத்து ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் பெயரை முதலில் போட்டுவிட்டு மோகன்லாலின் பெயரை இரண்டாவதாக போட்டதே மல்லுவுட் ரசிகர்களின் கடுப்புக்கு காரணம்.
மோகன் லால் எவ்வளவு சீனியர் நடிகர். அதிலும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அவரின் பெயரை இரண்டாவது இடத்தில் எப்படி போடலாம் என்று அவரது ரசிகர்கள் கொதித்துவிட்டனர்.
Judul : ஜில்லா 'ஃபர்ஸ்ட் லுக்'கை பார்த்து மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி
Deskripsi : திருவனந்தபுரம்: ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மோகன்லாலின் பெயர் இரண்டாவதாக போடப்பட்டுள்ளதை பார்த்துவிட்டு அவரின் மலையாள ரசிகர்கள் அதி...