சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக நடித்த தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ், இப்போ ‘இங்க என்ன சொல்லுது'ங்கிற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். வி.டி.வி கணேசின் நெருங்கிய நண்பரான சந்தானமும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவும், ஆண்டிரியாவும் இணைந்து நடித்துள்ளனராம். 45 வயதுக்குப் பின் கல்யாணம் செய்துகொள்ளும் ஒருவனின் கலாட்டாதான் இந்தப்படத்தின் கதை. வின்சென்ட் செல்வா இயக்குகிறார்.
இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரில் சிம்புவும் நடிக்கிறார் அத்துடன் "குட்டி பயலே... குட்டி பயலே" எனத் தொடங்கும் ஒரு பாடலை தானே எழுதி பாடவும் செய்திருக்கிறார். இந்தப்பாடல் படத்தின் ஹைலைட் பாடலாக அமையும் என்கிறார்கள். படத்தில் சிம்புவுக்கு ஜோடி ஆண்டிரியா. இருவரிடையே செம கெமிஸ்ட்ரி என்கின்றனர் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தவர்கள்.
சிம்புவுடன் இதுவரை ஜோடியாக நடித்திராத, ஆனால் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த வி.டி.வி.கணேஷ் அதற்கு ஆண்ட்ரியாதான் சரியான தேர்வு என முடிவு செய்திருக்கிறார்.
Judul : சிம்பு - ஆண்டிரியா செம கெமிஸ்ட்ரி… கடுப்பில் ஹன்சிகாவா?
Deskripsi : சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக நடித்த தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ், இப்போ ‘இங்க என்ன சொல்லுது'ங்கிற படத்தை தயாரித்து ஹீர...