ஆரம்பம் படத்தின் கதையை ஓ.கே செய்தபோதே அஜீத்திடம் சில டைட்டில்களையும் சொன்னாராம் விஷ்ணுவர்தன். ஆனால், அவை அஜீத்துக்கு பிடிக்கவில்லையாம். படப்பிடிப்பை தொடங்கி விடுவோம். டைட்டில் பற்றி பின்னர் யோசிப்போம் என்று கூறி விட்டாராம் அஜீத். அதனால் அதன்பிறகு டைட்டில் பிரச்னையை விடுத்து படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்கள்.
இதனால், கிட்டத்தட்ட படம் முடிகிறவரை டைட்டிலையே அறிவிக்காமல் இருந்தனர். இதனால் தலயின் படத்துக்கான தலைப்பு என்னென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள் அவரது அபிமானத்திற்குரிய ரசிகர்கள். இதையறிந்த விஷ்ணுவர்தன், இனிமேலும் டைட்டிலை அறிவிக்காமல் இருப்பது சரியல்ல என்று அடுத்தபடியாக மீண்டும் டைட்டில் பரிசீலனையில் இறங்கினாராம்.
தனது யூனிட்டுடன் சில நாட்களாக அமர்ந்து ஏராளமான டைட்டில்களை எழுதி அதை அஜீத்திடம் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தாராம். ஆனால் அஜீத்தோ வழக்கம்போல, எந்த டைட்டிலும் தனக்கு பிடித்தமானதாக இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் ஒருநாள், ஆரம்பம் என்ற தலைப்பை அவரிடம் சொன்னாராம்.
ஆனால், வழக்கம்போல் இதையும் அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் என்றுதான் நினைத்தாராம் விஷ்ணுவர்தன். ஆனால், அஜீத்தோ, இதுதான் இந்த கதைக்கு சரியான டைட்டில் என்றாராம். அதோடு, இதுவரை நீங்கள் சொன்ன டைட்டில்கள் எல்லாம் ஹீரோயிசத்தை மையமாகக்கொண்டு இருந்தது. இதுதான் கதையை மையமாகக்கொண்டிருக்கிறது. அதனால் இநத டைட்டிலையை வைத்து விடுங்கள் என்றாராம்.
இப்படி பல மாதங்களாக நூற்றுக்கணக்கான டைட்டில்களை யோசித்து கடைசியில் அஜீத் ஓ.கே செய்த இந்த டைட்டில் இப்போது ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருப்பதைப்பார்த்து பூரித்துப்போகும் விஷ்ணுவர்தன், கதையை தேர்வு செய்வதில் மட்டுமின்றி டைட்டில் தேர்வு செய்வதிலும் வல்லவராக இருக்கிறார் அஜீத் என்கிறார்.
Judul : அஜீத் தேர்ந்தெடுத்த ஆரம்பம் டைட்டில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது! -விஷ்ணுவர்தன்
Deskripsi : ஆரம்பம் படத்தின் கதையை ஓ.கே செய்தபோதே அஜீத்திடம் சில டைட்டில்களையும் சொன்னாராம் விஷ்ணுவர்தன். ஆனால், அவை அஜீத்துக்கு பிடிக்கவில்லையாம். ...