தமிழ்நாட்டைப்போலவே கன்னடத்திலும் நாளை ஆரம்பம் ரிலீசாகிறது. ஆனாலும் நவம்பர் முதல் தேதியில் கர்நாடகாவில் ஆரம்பம் திரையிடப்படாது மறுநாள் தீபாவளியிலிருந்து ஆரம்பம் தொடர்ந்து திரையிடப்படும். அதிலும் குறிப்பாக மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் சூழ்நிலையை பொறுத்தே ஆரம்பத்தின் திரையீடுகள் இருக்கும்.
காரணம் கர்நாடகாவின் மிக முக்கிய திருவிழாவான ராஜ்யூத்சவா நவம்பர் 1ந் தேதி முதல் தொடங்குகிறது. இது நம்ம ஊர் பொங்கல் மாதிரி மண் சார்ந்த பண்டிகை. ஒருவாரம் வரை நடக்கும். இந்த நாட்களில் கன்னட மக்களின் இன உணர்வும், மொழி உணர்வும் தூக்கலாக இருக்கும். அதோடு காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கும் விவசாயிகள் மாண்டியா, மைசூர் மாவட்டங்களில பெருவாரியாக இருக்கிறார்கள். இதனால் இந்த ஒரு வாரம் மட்டும் தியேட்டர்காரர்கள் தமிழ் படங்களை திரையிட மாட்டார்கள். அஜீத் பொதுவான மனிதர் என்பதால் ஒரு சில நாட்கள் மட்டும் தவிர்த்துவிட்டு தொடர்ந்து படத்தை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.
Judul : காவில் ஆரம்பத்திற்கு ஒரு நாள் பிரேக்!
Deskripsi : தமிழ்நாட்டைப்போலவே கன்னடத்திலும் நாளை ஆரம்பம் ரிலீசாகிறது. ஆனாலும் நவம்பர் முதல் தேதியில் கர்நாடகாவில் ஆரம்பம் திரையிடப்படாது மறுநாள் த...