நய்யாண்டி படத்தில் நஸ்ரியா ஏற்படுத்திய தொப்புள் சர்ச்சை அவரது மார்க்கெட்டையே பதம் பார்த்து விட்டது. புதிய படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்களெல்லாம் பின்வாங்கி விட்டதால், நஸ்ரியாவின் கோலிவுட் மார்க்கெட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு சின்ன குண்டூசி சமாச்சாரத்தை பெரிய கடப்பாறை ஆக்கி விட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் நஸ்ரியா.ஆனால், இந்த சர்ச்சைக்கிடையேயும் அவரை தனது புதிய படத்துக்கு புக் பண்ணியிருக்கிறார் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை. ஆனால், போட்டோ செஷன் நடத்தியபோது இயக்குனர் கொடுத்த காஸ்டியூம்களை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அப்படியே அணிந்து நடித்து போஸ் கொடுத்திருக்கிறாராம் நஸ்ரியா.அதோடு, பாடல் காட்சிகளில் இன்னும் கிளாமரான ஆடைகள் அணியச்சொன்னாலும் அணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் நஸ்ரியா. இதனால் என்னைப் பொறுத்தவரை நஸ்ரியா விவகாரமான நடிகையாக தெரியவில்லை. விவரமான நடிகையாகத்தான் தெரிகிறார் என்று சொல்லும் பாலாஜிமோகன், ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், இப்போது அவற்றையெல்லாம் அவர் தளர்த்தி விட்டதாகவே தெரிகிறது என்கிறார்.
Judul : கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டாராம் தொப்புள் நடிகை நஸ்ரியா!
Deskripsi : நய்யாண்டி படத்தில் நஸ்ரியா ஏற்படுத்திய தொப்புள் சர்ச்சை அவரது மார்க்கெட்டையே பதம் பார்த்து விட்டது. புதிய படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்...