தற்போது இளையராஜா உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா, மலேசியாவில் கிங் ஆப் கிங் என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை வருகிற டிசம்பர் 28ந் தேதி நடத்துகிறார். 80களில் ஹிட்டான இளையராஜாவின் பாடல்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளனர். இதில் இளையராஜாவோடு, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, வாசுகி பாஸ்கர், கங்கை அமரன், பிரேம்ஜி உள்பட இளையராஜாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பாடுகிறார்கள். இவர்கள் தவிர முன்னணி பாடகர் பாடகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதுபற்றி கார்த்திக்ராஜா கூறியதாவது: "அப்பாவை உலகமே கவுரவித்துக் கொண்டிருக்கிறது. நம் குடும்பத்தின் சார்பில் அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தபோது வெங்கட்பிரபு சொன்ன ஐடியாதான் இந்த கிங் ஆப் கிங் கான்செப்ட். அவரது பாடல்களை அவரது வாரிசுகளான நாங்களும் மற்ற பாடகர்களும் பாட இருக்கிறோம். மலேசியாவைத் தொடர்ந்து சென்னையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம்" என்றார்.
Judul : ஒரே மேடையில் 3 ராஜாக்கள்!
Deskripsi : தற்போது இளையராஜா உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா, மலேசியாவில் கி...