மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த கண்ணன் ஒரு பாலிசி வைத்திருக்கிறார். ஒரு
சொந்த கதையை டைரக்ட் செய்தால் அடுத்து ஒரு ரீமேக் படத்தை டைரக்ட்
செய்வார். முதல் படம் ஜெயம்கொண்டான் சொந்தக் கதை. அடுத்து கண்டேன் காதலை
ரீமேக். அதற்கு பிறகு வந்தான் வென்றான் சொந்த கதை, அதைத் தொடர்ந்து வந்த
சேட்டை ரீமேக். இப்போது அடுத்து சொந்த கதையை டைரக்ட் செய்கிறார் படத்தின்
ஹீரோ விமல்.
பட்டத்துயானைக்கு பிறகு மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும்
படம். இமான் மியூசிக், பி.ஜி.முத்தையா கேமரா. "பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்.
அதுக்கு விமல்தான் பொருத்தமா இருப்பார்னு அவரை நடிக்க வைக்கிறோம்.
செங்கோட்டை, குற்றாலம் பகுதியில் ஷூட்டிங் நடக்குது. ஹீரோயினையும் மற்ற
டெக்னீஷயன்களையும் செலக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். இது ஒரு குறுகியகால
தயாரிப்பு. பிப்ரவரியில் ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரே ஷெட்யூல்ல முடித்து ஜுன்
மாதம் ரிலீஸ் பண்ணிடுவோம்" என்கிறார் கண்ணன்.
Judul : விமலை டைரக்ட் செய்கிறார் கண்ணன்!
Deskripsi : மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த கண்ணன் ஒரு பாலிசி வைத்திருக்கிறார். ஒரு சொந்த கதையை டைரக்ட் செய்தால் அடுத்து ஒரு ரீமேக் படத்தை டைரக...