சினிமாவில் தற்போது வரும் காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து
உட்கார்ந்து பார்க்க முடியவில்லை, அந்தளவுக்கு காமெடி என்ற பெயரில் கெட்ட
விஷயங்களை சொல்கிறார்கள் என வடிவேலு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்
நம்பர்-1 காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. அரசியல் ரீதியாக சென்றதால்
இரண்டு ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு இன்றி இருந்தார். தற்போது மீண்டும்
ஒரு புது உத்வேகத்துடன் நடிக்க தொடங்கியுள்ளார் வடிவேலு. விரைவில் இவர்
இரண்டு வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஜகஜ்ஜால புஜபல தொனாலிராமன் படம்
வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வரும் காமெடி சீன்களை
பற்றி கடுமையாக சாடியுள்ளார் வடிவேலு. அவர் கூறியுள்ளதாவது, நான்
சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள்.
காமெடி யார் செய்தாலும் அதை ரசிக்கலாம். நானும் சில படங்களை பார்த்தேன்.
ஆனால் அதில் காமெடியே இல்லை, எனக்கு சிரிப்பும் வரவில்லை. மாறாக இப்போது
வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள். மனைவி, குழந்தை
என குடும்பத்தோடு சேர்ந்து காமெடி சீன்களை பார்க்க முடியவில்லை. இதுபோன்ற
காட்சிகளை பார்க்கும்போது மன அழுத்தம் தான் வருகிறது. அதனால் இதுபோன்ற
காமெடி காட்சிகளை பார்த்து கண்ணையும், மனதையும் கெடுத்து கொள்ளாதீர்கள்
என்று கூறியுள்ளார்.
Judul : இன்றைய காமெடியை குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை - வடிவேலு
Deskripsi : சினிமாவில் தற்போது வரும் காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை, அந்தளவுக்கு காமெடி என்ற பெயர...