தலைவா படத்துக்குப்பிறகு தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்கும் அமலாபாலினால், தெலுங்கு நடிகைகளின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியவில்லையாம். அதனால் அடுத்து தாய்மொழியான மலையாளத்தில் ஆழக்காலூன்றி விடவேண்டும் என்று கோதாவில் குதித்திருக்கிறார்.நேரம் படத்தில் நஸ்ரியாவுடன் நடித்தவர் நிவின் பாலி. இவருடன் நடிப்பதற்கு ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கும் அமலாபால், அடுத்தடுத்து பஹத்பாசில் உள்ளிட்ட சில வளர்ந்து வரும் ஹீரோக்கள் தன் மீது கிரேஸில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் நடிக்கும் படங்களை கைப்பற்றி உள்ளாராம்.இதற்கடுத்தபடியாக மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கும் தீவிர முயற்சி எடுக்கும் அமலாபால், மலையாள பாணியில் இருந்து விடுபட்டு, தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது போலவே முடிந்தவரை கிளாமராகவும் நடிக்கிறேன் என்றும் கவர்ச்சிக்கதவுகளை தாய்மொழி ரசிகர்களுக்காக திறந்து விட்டுள்ளாராம்.
Judul : தாய்மொழி ரசிகர்களுக்காக கவர்ச்சிக்கதவுகளை திறந்துவிட்ட அமலாபால்!
Deskripsi : தலைவா படத்துக்குப்பிறகு தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்கும் அமலாபாலினால், தெலுங்கு நடிகைகளின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியவ...