அமெரிக்க, பாப் இசை பாடகி மடோனா, பல ஆண்டுகளுக்கு முன், கத்தி முனையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பிரபல பாப் பாடகி மடோனா, 55. இவர், தன் இசையால் உலகின் பல நாடுகளை சேர்ந்த இசைப் பிரியர்களை, தன் வசப்படுத்தியுள்ளார். இளைஞர்களை கவரும், கவர்ச்சி தோற்றத்துடன் மேடைகளில் தோன்றும் இவர், பல ஆண்டுகளுக்கு முன், தன் வாழ்வில் நடந்த சோக சம்பவத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கனவுகளை சுமந்து, நியூயார்கில் குடியேறிய தன்னை, மர்ம கும்பல் கத்தி முனையில் மிரட்டி, பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.இது குறித்து மடோனா கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன், பெரும் கனவுகளுடன், நியூயார்க்கில் குடியேறினேன். அப்போது, என்னிடம் பெரும் தொகை கிடையாது. ஒரு நாள் வெளியில் சென்று, வீடு திரும்பிய போது, மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னை பலாத்காரம் செய்தனர். என் வீட்டின் கதவுகள் பல முறை உடைக்கப்பட்டன. என் வீட்டில் இருந்த, விலை மதிப்பற்ற பொருட்கள் திருடப்பட்டன. இச்சம்பவங்களால் மனம் உடைந்து, பல முறை தனிமையில் அழுது இருக்கிறேன். எனினும், எனக்கு நானே ஆறுதல் கூறி, மீண்டெழுந்தேன். சோகத்தை பெரிதுபடுத்தி சோர்வடைந்திருந்தால், இன்று இந்த இடத்தை அடைந்திருக்க முடியாது. இவ்வளவு காலம் என்னுள் அடக்கி வைத்திருந்த சோகத்தை, ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.இவ்வாறு மடோனா கூறியுள்ளார்.
Judul : கத்தி முனையில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் - மடோனா பகீர் தகவல்!
Deskripsi : அமெரிக்க, பாப் இசை பாடகி மடோனா, பல ஆண்டுகளுக்கு முன், கத்தி முனையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியு...