உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா!
ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல். விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் காமெடியில செம கலக்கு கலக்கப்போகிறாராம் கமல்.அதனால் தன்னுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராமையும் இந்த படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கும் கமல், அப்படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தையும் இப்போது இணைத்துள்ளார். ஏற்கனவே பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பவர்கள் என்பதால், இந்த படத்தில் அவர்களின் காமெடி கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட்டாகியுள்ளதாம்.தற்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கலகலப்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால், அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்து வருகிறார் கமல். அதனால் தெனாலி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் படங்களை மிஞ்சும் வகையில் நூறு சதவிகிதம் காமெடியை கொடுத்து ரசிகர்களின் வயிற்றை உத்தமவில்லன் பதம் பார்ப்பார் என்று இப்போதே கியாரண்டி கொடுக்கிறார்கள்.
Judul : உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா.....
Deskripsi : உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா! ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நட...