படகுபோட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை மேடையில் இருந்த காங்.,
எம்.பி., பீதாம்பர குருப் சில்மிஷம் செய்ததாக புகார் செய்த நடிகை ஸ்வேதா
மேனன், இப்போது அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். பீதாம்பர குருப் தன்னிடம்
மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக ஸ்வேதா கூறியுள்ளார்.
மலையாள
பிரபல கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன். இவர், இருதினங்களுக்கு முன்னர் கேரளம்
மாநிலம் கொல்லம் அருகே பிரசிடென்ட் கோப்பை படகுப் போட்டி நிகழ்ச்சியில்
கலந்து கொண்டார். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில்,
வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். ஸ்வேதா மேனன்
அருகே காங்கிரஸ் எம்.பி., பீதாம்பர குருப் அமர்ந்திருந்தார். அப்போது
பீதாம்பரம், ஸ்வேதா மேனனிடம் சில்மிஷ செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர்
படகுபோட்டி முடிந்து வெளியே வந்த ஸ்வேதா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, ""மேடையில் இருந்த என்னை, பீதாம்பர குருப் எம்.பி., தொட்டுத்
தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற
போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,
என்றார்.
ஸ்வேதாவின் இந்த புகார் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. ஸ்வேதாவிற்கு ஆதரவாக பெண்கள் சங்கமும் களமிறங்க
தொடங்கியது. இதற்கிடையே நேற்று எம்.பி. பீதாம்பர மீது போலீசில் புகாராக
கொடுத்தார். போலீசாரும் வழக்கை பதிவு செய்தனர். இந்நிலையில் புகார்
கொடுத்த இரண்டு-மூன்று மணிநேரத்திலேயே தனது புகாரை வாபஸ் பெறுவதாக ஸ்வேதா
அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நடந்த சம்பவத்திற்கு
பீதாம்பர குருப், தன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனால் அவர்
மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.
Judul : சில்மிஷ எம்.பி., மன்னிப்பு கேட்டார் - புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்
Deskripsi : படகுபோட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை மேடையில் இருந்த காங்., எம்.பி., பீதாம்பர குருப் சில்மிஷம் செய்ததாக புகார் செய்த நடிகை ஸ...